Bible Language

Ruth 4:12 (NCV) New Century Version

Versions

TOV   இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
IRVTA   இந்தப் பெண்ணிடம் யெகோவா உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள். PS
ERVTA   தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்" என்றனர்.
RCTA   இவ்விளம் பெண் மூலம் ஆண்டவர் உனக்கு அருளவிருக்கிற மகப்பேற்றினால் உன் வீடு, தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பாரேசுடைய வீட்டைப்போல் ஆகக்கடவது" என்றனர்.
ECTA   ஆண்டவர் இந்தப் பெண் வழியாக அருளும் பிள்ளைகளால் உமது குடும்பம் யூதா தாமார் மகனாம் பெரேட்சு குடும்பம் போன்று விளங்குவதாக! என்று வாழ்த்தினர்.