Bible Language

1 Kings 12:6 (NET) New English Translation

Versions

TOV   அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
IRVTA   அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
ERVTA   சாலொமோன் உயிரோடு இருந்தபோது அவனுக்கு யோசனை சொல்வதற்காகச் சில முதியவர்கள் இருந்தனர். அவர்களிடம் ரெகொபெயாம் என்ன செய்வது என்று கேட்டான். ரெகொபெயாம், "இந்த ஜனங்களுக்கு நான் என்னபதில் சொல்ல வேண்டும்?" என்று கலந்து ஆலோசித்தான்.
RCTA   அப்பொழுது அரசன் ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவர் முன்னிலையில் நின்ற முதியோரோடு கலந்து ஆலோசித்து, "இம்மக்களுக்கு மறுமொழி சொல்ல நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான்.
ECTA   அப்பொழுது அரசன் ரெகபெயாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அரசவையில் பணியாற்றிய முதியோரிடம் "இம் மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன?" என்று ஆலோசனை கேட்டான்.