Bible Language

1 Kings 18:25 (NET) New English Translation

Versions

TOV   அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
IRVTA   அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
ERVTA   எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், "நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்" என்றான்.
RCTA   அப்போது எலியாசு பாவாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி, "நீங்கள் பலராய் இருப்பதால், நீங்களே முதலில் ஒரு காளையைத் தேர்ந்து கொண்டு அதைத் தயார் செய்து தீப்போடாமல் உங்கள் தெய்வங்களின் பெயரை மட்டும் சொல்லி அழைத்து வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார்.
ECTA   பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், "நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் "முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள்" என்றார்.