Bible Language

2 Samuel 19:37 (NET) New English Translation

Versions

TOV   நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
IRVTA   நான் என்னுடைய ஊரிலே இறந்து, என்னுடைய தாய் தகப்பன்மார்களுடைய கல்லறையில் அடக்கம்செய்யும்படி, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானான கிம்காம், ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
ERVTA   ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது அரசனாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்" என்றான்.
RCTA   உம் ஊழியனாகிய நான் திரும்பிப் போகவிடும். நான் என் ஊரிலேயே இறந்து என் தாய் தந்தையர் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்படும்படி, தாங்கள் விடை தர வேண்டும், இதோ, காமாம் என்ற உம் அடியான். அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மோடு போகட்டும். உமக்கு நல்லதென்று தோன்றுகிறதை அவனுக்குச் செய்யும்" என்றான்.
ECTA   உம் பணியாளனைப் போகவிடு. நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்.