Bible Language

Exodus 34:9 (NET) New English Translation

Versions

TOV   ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
IRVTA   “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள் * இருதய கடினமுள்ள மக்கள் ; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான். உடன்பட்டிக்கை மறுபடியும் செய்யப்பட்டது. (யாத் 14:23; உபா 7:1-5; 16:1-17) PS
ERVTA   "கர்த்தாவே நீர் என்னோடு சந்தோஷமாக இருக்கிறீர் என்பது உண்மையானால் தயவு செய்து எங்களோடு வாரும். இவர்கள் பிடிவாதமான ஜனங்கள் என்பதை அறிவேன். ஆனால் நாங்கள் செய்த தீயசெயல்களுக்கு எங்களை மன்னித்தருளும்! உமது ஜனங்களாக எங்களை ஏற்றுக்கொள்ளும்" என்றான்.
RCTA   ஆண்டவரே, உமது முன்னிலையில் அடியேனுக்கு அருள் கிடைத்ததாயின், ( இம் மக்கள் வணங்காக் கழுத்துடையவர்களாகையால் ) நீர் எங்களுடன் எழுந்தருளவும், எங்கள் அக்கிரமங்களையும் பாவங்களையும் போக்கவும், அடியோர்களை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் என்றார்.
ECTA   "என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்.