Bible Language

Isaiah 21:5 (NET) New English Translation

Versions

TOV   பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
IRVTA   பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளியை அமர்த்துங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.
ERVTA   எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஜனங்கள் நினைத்தனர். "மேசையைத் தயார் செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!" எனறு ஜனங்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் படை வீரர்கள் "காவல்காரரை நிறுத்துங்கள்!அதிகாரிகளே எழுந்து உங்கள் கேடயங்களைப் பளபளப்பாக்குங்கள்!" என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
RCTA   பந்தி தயார் செய்கிறர்கள், கம்பளங்களைப் பரப்புகின்றார்கள்; சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். தலைவர்களே, எழுந்திருங்கள்; கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.
ECTA   பந்தி தயார் செய்கிறார்கள்; கம்பளத்தை விரிக்கிறார்கள்; உண்கிறார்கள், குடிக்கிறார்கள்; தலைவர்களே, எழுங்கள்; கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.