Bible Language

Jeremiah 31:35 (NET) New English Translation

Versions

TOV   சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நிமயங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
IRVTA   சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரன், நட்சத்திரங்களை இரவு வெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கும் விதத்தில் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "கர்த்தர் பகலில் சூரியனைப் பிரகாசிக்கும்படிச் செய்தார். கர்த்தர் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இரவில் பிராகாசிக்கும்படிச் செய்தார். கர்த்தர் கடலை கலக்குகிறார். அதனால் அதன் அலைகள் கரையில் மோதுகின்றன. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்."
RCTA   இஸ்ராயேல் நிலைத்திருக்கும்: ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்; அவர் பகலில் ஒளி வீசக் கதிரவனையும், இரவில் ஒளி கொடுக்க நிலவின் குறிப்பிட்ட முறைமையையும் விண்மீன்களையும் தருகிறவர்; அவர் கடலைக் கொந்தளிக்கச் செய்து அலைகளை ஒலிக்கச் செய்கிறவர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்: அவர் சொல்வது:
ECTA   ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்; இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்; அலைகள் முழங்குமாறு கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்; "படைகளின் ஆண்டவர்" என்பது அவரது பெயராம். அவர் கூறுவது இதுவே;