Bible Language

Jeremiah 52:6 (NET) New English Translation

Versions

TOV   நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல்போயிற்று.
IRVTA   நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில் பஞ்சம் நகரத்தில் அதிகரித்து, தேசத்தின் மக்களுக்கு ஆகாரமில்லாமல் போனது.
ERVTA   அந்த ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் நகரில் பசியானது மிக அதிகமாக இருந்தது. நகர ஜனங்கள் உண்பதற்கு உணவு எதுவும் மீதியில்லை.
RCTA   நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாள் பட்டணத்தில் கடும் பஞ்சம் உண்டாயிற்று; நகர மக்களுக்கு உணவு இல்லாமற்போயிற்று.
ECTA   நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.