Bible Language

Romans 9:20 (NET) New English Translation

Versions

TOV   அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
IRVTA   அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
ERVTA   அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. என்னை ஏன் இவ்வாறு செய்தாய்? என்று மண்ஜாடி கேட்கலாமா?
RCTA   அற்ப மனிதா! கடவுளுக்கு எதிர் வினா விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம், ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ?
ECTA   மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், "ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?" எனக் கேட்குமோ?