Bible Language

Zechariah 14:5 (NET) New English Translation

Versions

TOV   அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
IRVTA   அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
ERVTA   அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் அரசனான உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள்.
RCTA   அந்த மலைகளின் பள்ளத்தாக்கு ஓடுவீர்கள்; ஏனெனில் மலைகளின் பள்ளத்தாக்கு அதன் பக்கத்துப் பள்ளத்தாக்கைத் தொடும்; நீங்களோ யூதாவின் அரசனாகிய யோசியாசின் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ஓடிப் போனது போல் ஓடுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வருவார்; அவரோடு பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள்.
ECTA   அப்போது, நீங்கள் என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய்த் தப்பியோடுவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆட்சால் வரை பரவியிருக்கும்; நீங்களோ யூதாவின் அரசன் உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தப்பியோடியதுபோல் ஓடிப்போவீர்கள்; அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்.