Bible Language

1 Chronicles 29:17 (NLV) New Life Verson

Versions

TOV   என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.
IRVTA   என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.
ERVTA   எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன். ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர். நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன். நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
RCTA   என் கடவுளே, நீர் இதயச் சிந்தனைகளை அறிகிறவர் என்றும், நேர்மையை விரும்புகிறவர் என்றும் நான் அறிவேன். ஆகையால், இதய நேர்மையுடன் இவற்றை எல்லாம் மகிழ்வுடன் ஒப்புக்கொடுத்தேன். இங்கே கூடியிருக்கிற உம் மக்கள் உமக்குக் காணிக்கைகளை மனப் பூர்வமாய் ஒப்புகொடுக்கக் கண்டு மகிழ்ந்தேன்.
ECTA   என் கடவுளே, நீர் இதயத்தை ஆய்ந்தறிபவர் என்றும், நேரியனவற்றை நாடுபவர் என்றும் நான் அறிவேன். நான் நேரிய மனத்தினனாய்த் தாராளமனத்துடன் இவை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இங்கே குழுமியிருக்கும் உம் மக்களும் இப்பொழுது தாராள மனத்துடன் கொடுத்ததைக் கண்டு மகிழ்கிறேன்.