Bible Language

2 Kings 20 (NLV) New Life Verson

Versions

TOV   அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
IRVTA   {எசேக்கியாவின் வியாதி} PS அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.
ERVTA   அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, "நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்" என்றான்.
RCTA   அந்நாட்களில் எசேக்கியாசு நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தான். ஆமோசின் மகனும் இறைவாக்கினருமான இசயாசு அவனிடம் வந்து, "நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில், நீர் இனிப் பிழைக்க மாட்டீர், இறந்து போவீர் என்று ஆண்டவர் சொல்கிறார்" என்றார்.
ECTA   அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்" என்றார்.