Bible Language

2 Kings 16:9 (NLV) New Life Verson

Versions

TOV   அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
IRVTA   அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிமக்களைக் கீர் என்னும் பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
ERVTA   அசீரியாவின் அரசன், ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.
RCTA   அசீரிய அரசன் அவனது விருப்பத்திற்கு இசைந்து, தமாஸ்கு நகரில் நுழைந்து, அதை அழித்து விட்டு, அதன் குடிகளைச் சிறைப்படுத்திச் சீரோனுக்குக் கொண்டு போனான். அன்றியும் ரசீனையும் கொன்றான்.
ECTA   அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.