Bible Language

2 Kings 18:21 (NLV) New Life Verson

Versions

TOV   இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
IRVTA   இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.
ERVTA   உடைந்த நாணல் புல்லால் ஆன கைத் தடியை நம்புகிறாய். எகிப்து இத்தகைய கைத் தடியைப் போன்றது! ஒருவன் இக்கைத்தடியின் மீதே முழுக்கச் சாய்ந்தால், அதுவும் உடையும் கையைக் கிழித்து காயத்தை உருவாக்கும். எகிப்தும் தன்னை நம்புகிறவர்களுக்கு இவ்வாறே செய்து வருகிறது.
RCTA   எகிப்து நாட்டை நம்பியிருக்கின்றீரோ? அது நெரிந்த நாணலேயன்றி வேறன்று. நெரிந்த நாணலின் மேல் ஒருவன் சாய்ந்தால் அது உடைந்து அவனது கையில் குத்தி ஊடுருவி விடுமன்றோ? எகிப்தின் அரசன் பாரவோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே இருப்பான்.
ECTA   இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான்.