Bible Language

2 Kings 8:5 (NLV) New Life Verson

Versions

TOV   செத்துப்போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான் என்றான்.
IRVTA   இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான்.
ERVTA   கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று அரசனிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, "எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப்பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!" என்று கூறினான்.
RCTA   அதற்கு ஜியேசி, இறந்த ஒருவனுக்கு எலிசேயு உயிர் கொடுத்திருந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறினான். அப்போது உயிர் பெற்ற சிறுவனின் தாய் அரசன் முன் வந்து, தன் வீட்டையும் நிலங்களையும் தனக்குத் திரும்பித் தரவேண்டும் என்று அரசனிடம் முறையிட்டாள். அப்போது ஜியேசி, "என் தலைவராகிய அரசே, இதோ! அந்த பெண்; இவளுடைய மகனுக்குத் தான் எலிசேயு உயிர் கொடுத்தார்" என்றான்.
ECTA   அவனும் இறந்தவனை எலிசா உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, "அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார்" என்றான்.