Bible Language

Jeremiah 40 (NLV) New Life Verson

Versions

TOV   பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
IRVTA   {எரேமியா விடுவிக்கப்படுதல்} PS பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்கு எருசலேமிலும் யூதாவிலும் சிறைப்பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்கு யெகோவாவால் உண்டான வசனம்:
ERVTA   ராமா நகரத்தில் எரேமியா விடுதலை செய்யப்பட்டப் பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுசராதான் எனும் பாபிலோனிய அரசனது சிறப்புக் காவலாளிகளின் தளபதி ராமா நகரில் எரேமியாவைக் கண்டான். எரேமியா சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். அவன் எருசலேம் மற்றும் யூதாவின் கைதிகளுக்கு இடையில் இருந்தான். அக்கைதிகள் பாபிலோனுக்குக் கொண்டு போவதற்காக இருந்தனர்.
RCTA   சேனைத் தலைவனாகிய நபுஜார்தான், யெருசலேமினின்றும் பபிலோனுக்கு அடிமைகளாய்க் கூட்டிக் கொண்டு போனவர்களின் கூட்டத்திலிருந்து எரெமியாசைக் கூப்பிட்டு அவருக்குப் பூட்டுப்பட்டிருந்த சங்கிலிகளை அறுத்து அவரை ராமா என்னுமிடத்தில் விடுதலை செய்த பின்னர், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது.
ECTA   எருசலேமினின்றும் யூதாவினின்றும் விலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்டோராய்ப் பாபிலோனுக்குச் சென்று கொண்டிருந்த மக்களிடையே எரேமியாவும் விலங்கிடப்பட்டிருந்ததைக் கண்ட மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அவரை இராமாவில் விடுதலை செய்தார். அதன்பின் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.