Bible Language

Numbers 18:2 (NLV) New Life Verson

Versions

TOV   உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
IRVTA   உன்னுடைய தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன்னுடைய சகோதரர்களையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன்னுடைய மகன்களுமோ சாட்சியின் கூடாரத்திற்குமுன்பு ஊழியம் செய்யவேண்டும்.
ERVTA   உனது கோத்திரத்தில் உள்ள மற்ற வேவியர்களையும் உங்களோடுச் சேர்த்துக்கொள். ஆசரிப்புக் கூடாரத்தில் நீங்களும் உங்கள் மகன்களும் செய்யும் வேலைகளுக்கு அவர்கள் உதவுவார்கள்.
RCTA   குருத்துவத்தைப் பற்றிய அக்கிரமத்தையோ நீயும் உன் புதல்வர்களும் சுமந்து கொள்வீர்கள். உன் தந்தையாகிய லேவியின் செங்கோலை ஏந்தி, அவனுடைய கோத்திரத்தாராகிய உன் சகோதரரைச் சேர்த்துக் கொள். அவர்கள் உனக்கு உதவி செய்யவும், உன் ஏவலைச் செய்யவும் தயாராயிருக்கும்படி பார்த்துக் கொள். ஆனால், நீயும் உன் புதல்வரும் சாட்சியக் கூடாரத்துக்குள்ளே ஊழியம் செய்வீர்கள்.
ECTA   மூதாதையர் குலமான லேவிக் குலத்திலுள்ள உன் சகோதரரையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வர வேண்டும்; அவர்கள் உங்களோடு சேர்ந்து, நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் உடன்படிக்கைக்கூடாரத்தின் முன்நிற்கும்போது உங்களுக்கு உதவி செய்யட்டும்.