Bible Language

Psalms 141 (NLV) New Life Verson

Versions

TOV   கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
IRVTA   யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,
என்னிடத்திற்கு விரைந்துவாரும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,
என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
ERVTA   கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன். நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும். விரைவாக எனக்கு உதவும்!
RCTA   ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கூவுகிறேன்: விரைவாய் எனக்குத் துணை செய்யும்.
ECTA   ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.