Bible Language

Acts 27:34 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
IRVTA   ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான்.
ERVTA   நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள் என்றான்.
RCTA   இல்லாவிட்டால் எப்படி உயிர் பிழைக்க முடியும்?" என்று உணவு கொள்ள வற்புறுத்தினார். "உங்களுள் எவனுக்கும் ஒரு தலை மயிர்கூட சேதமடையாது" என்றார்.
ECTA   எனவே நீங்கள் உணவருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்பொது தான் நீங்கள் உயிர்பிழைக்க முடியும். ஏனெனில் உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒருமுடி கூட விழாது" என்றார்.