Bible Language

Daniel 11:30 (NLV) New Life Verson

Versions

TOV   அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான்.
IRVTA   அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனவேதனையடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபம்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான்.
ERVTA   கித்தீமிலிருந்து கப்பல்கள் வந்து வட பகுதி அரசனுக்கு எதிராகப் போரிடும். அக் கப்பல்கள் வந்து அவனை அச்சுறுத்துவதை அவன் காண்பான். பிறகு அவன் திரும்பிப் போய் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் கோபங்கொள்வான். அவன் திரும்பி, பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைவிட்டவர்களை ஆதரிப்பான்.
RCTA   அவனுக்கு விரோதமாய் உரோமையர்கள் கப்பல்களில் வருவார்கள்; அவனோ தோல்வியடைந்து திரும்பிப்போய்ப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் ஆத்திரங்கொண்டு, நடவடிக்கை எடுப்பான்; திரும்பி வந்து, பரிசுத்த உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள் மேல் கவனத்தைத் திருப்புவான்.
ECTA   அவனுக்கு எதிராக இத்தியர்கள் கப்பல்களில் வருவார்கள்; அவனோ அவர்களுக்கு அஞ்சிப் பின் வாங்கிப் புறமுதுகிட்டு ஓடுவான்; அவன் கடுஞ்சினமுற்று புனித உடன்படிக்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பான்; மீண்டும் வந்து, புனித உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள் மேல் தன் கவனத்தைத் திருப்புவான்.