Bible Language

Exodus 3:13 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
IRVTA   {தேவனுடைய நாமம் வெளிப்படுத்தப்பட்டது} PS அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான்.
ERVTA   அப்போது மோசே தேவனை நோக்கி, "நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?" என்று கேட்டான்.
RCTA   மோயீசன் கடவுளை நோக்கி: இதோ நான் இஸ்ராயேல் மக்களிடம் போய்: உங்கள் முன்னோரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார் என்று நான் சொல்லும்போது, அவர்கள்: அவருடைய பெயர் என்ன என்று என்னைக் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் என்றான்.
ECTA   மோசே கடவுளிடம், "இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, "அவர் பெயர் என்ன?" என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?" என்று கேட்டார்.