Bible Language

Ezra 10:18 (NLV) New Life Verson

Versions

TOV   ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
IRVTA   {கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்} PS ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
ERVTA   அயல்நாட்டுப் பெண்களை மணந்துக் கொண்ட ஆசாரியர் சந்ததியினரின் பெயர்கள்: யோசதாக்கின் மகனாகிய யெசுவா என் பவனின் சந்ததியிலும் யெசுவாவின் சகோதரர்களும்; மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா ஆகியோர்.
RCTA   குருக்கள் புதல்வரிலே புறவினப் பெண்களைக் கொண்டவர்கள் பெயர் வருமாறு: யோசுவா மக்களில் யோசெதேக் புதல்வரும் சகோதரருமான மாவாசியா, எலியெசேர், யாரீப், கொதொலியா ஆகியோர்.
ECTA   குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்; ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.