Bible Language

Isaiah 51:8 (NLV) New Life Verson

Versions

TOV   பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
IRVTA   பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
ERVTA   ஏனென்றால், அவர்கள் பழைய ஆடைகளைப் போன்றவர்கள். அவற்றைப் பொட்டுப்பூச்சிகள் உண்ணும் அவர்கள் மரக் கட்டையைப்போலாவார்கள். கரையான் அவற்றை உண்ணும். ஆனால், எனது நன்மை என்றென்றும் தொடரும். எனது இரட் சிப்பு என்றென்றும் தொடரும்!"
RCTA   ஏனெனில், ஆடையைப் போல் அவர்களைப் பூச்சிகள் தின்னும், ஆட்டு மயிரைப் போல் அவர்களை அரி புழுக்கள் தின்று விடும். நாம் அளிக்கும் விடுதலை என்றென்றைக்கும் இருக்கும், நாம் தரும் மீட்பு தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும்."
ECTA   ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்; அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்; நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்; நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.