Bible Language

Jeremiah 38:14 (NLV) New Life Verson

Versions

TOV   பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
IRVTA   {சிதேக்கியா மீண்டும் எரேமியாவிடம் கேட்ட கேள்விகள்} PS பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் யெகோவாவுடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலில் தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
ERVTA   பிறகு, அரசன் சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு அரசன், "எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு" என்றான்.
RCTA   செதேசியாஸ் அரசன் ஆளனுப்பி எரெமியாஸ் இறைவாக்கினரை வரவழைத்து, ஆண்டவருடைய திருக்கோயிலின் மூன்றாம் வாயிலில் அவரைச் சந்தித்து, அவரை நோக்கி, "நான் உம்மை ஒன்று கேட்கிறேன்; நீர் எதையும் என்னிடம் மறைக்கக் கூடாது" என்றான்.
ECTA   அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி, "நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது" என்று சொன்னான்.