Bible Language

Jeremiah 41:10 (NLV) New Life Verson

Versions

TOV   பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டு போனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப்போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.
IRVTA   பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான மக்கள் அனைவரையும் சிறைப்படுத்திக்கொண்டு போனான்; ராஜாவின் மகள்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகீக்காமின் மகனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப்போன மிஸ்பாவிலுள்ள மீதியான எல்லா மக்களையும் நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் மக்களிடத்தில் போகப் புறப்பட்டான்.
ERVTA   இஸ்மவேல், மிஸ்பா நகரத்தில் இருந்த அனைத்து ஜனங்களையும் கைப்பற்றினான். பின்னர் அம்மோனியர் வாழ்ந்த நகரத்தை கடக்கப் புறப்பட்டான். அவர்களில் அரசனது மகள்களும் மற்ற விடுபட்ட மனிதர்களும் இருந்தனர். இவர்களை கெதலியா கவனித்துக்கொள்ளும்படி நேபுசாராதானால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நேபுசராதான், பாபிலோன் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
RCTA   மஸ்பாத்தில் எஞ்சியிருந்த மக்கள் அனைவரையும் இஸ்மாயேல் சிறைப்படுத்தினான்; அவர்களுள் அயிக்காம் மகன் கொதோலியாசின் பொறுப்பில் சேனைத் தலைவன் நபுஜார்தான் ஒப்படைத்துச் சென்று, மஸ்பாத்திலேயே தங்கி விட்ட அரசிளம் பெண்களும், மற்றும் சில மக்களும் இருந்தனர்; நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு, அம்மோன் மக்களை நோக்கிப் போகப் புறப்பட்டான்.
ECTA   மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அகிக்காமின் மகன் கெதலியா பொறுப்பில் விட்டிருந்த அரசனின் புதல்வியரையும் மிஸ்பாவில் இருந்த மற்ற மக்கள் எல்லாரையும் இஸ்மயேல் சிறைப்பிடித்துக்கொண்டு அம்மோனியரின் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.