Bible Language

Jeremiah 50:24 (NLV) New Life Verson

Versions

TOV   பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
IRVTA   பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே.
ERVTA   பாபிலோனே, நான் உனக்காகக் கண்ணி வைத்தேன். அதனைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் நீ மாட்டிக்கொண்டாய். நீ கர்த்தருக்கு எதிராகச் சண்டையிட்டாய். எனவே நீ கண்டுப்பிடிக்கப்பட்டு பிடிப்பட்டாய்.
RCTA   பபிலோனே, உனக்கு வலை வீசினோம், நீ விழுந்தாய்; உனக்குத் தெரியாமலே நீ பிடிபட்டாய்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பினாய்.
ECTA   பாபிலோனே, நான் உனக்குக் கண்ணி வைத்தேன்; தெரியாமலே நீ அதில் மாட்டிக் கொண்டாய்; நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்; ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.