Bible Language

Joel 2:20 (NLV) New Life Verson

Versions

TOV   வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
IRVTA   வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
ERVTA   இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன். நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன். அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள். அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள். அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!" என்று கொன்னார்.
RCTA   வடநாட்டுப் படையை உங்களிடமிருந்து தொலைவிலோட்டுவோம், வறண்ட பாலைநிலத்திற்கு விரட்டி விடுவோம்; அதன் முன் பகுதியைக் கீழ்க்கடலுக்குள்ளும், பின் பகுதியை மேற்கடலுக்குள்ளும் ஆழ்த்துவோம். நாற்றமும் தீய வாடையும் அங்கே கிளம்பும், ஏனெனில் அப்படையானது பெரியன செய்தது.
ECTA   வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.