Bible Language

Nehemiah 5 (NLV) New Life Verson

Versions

TOV   ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.
IRVTA   {நெகேமியா ஏழைகளுக்கு உதவுதல்} PS மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.
ERVTA   ஏழை ஜனங்களுள் அநேகம் பேர் தங்கள் யூத சகோதரர்களுக்கு எதிராக முறையிடத் தொடங்கினார்கள்.
RCTA   அப்பொழுது சாதாரண மனிதர்களும் அவர்கள் மனைவியரும் தங்கள் சகோதரரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.
ECTA   பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.