Bible Language

Numbers 22:18 (NLV) New Life Verson

Versions

TOV   பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும் பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது.
IRVTA   பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் கட்டளையை நான் மீறக்கூடாது.
ERVTA   பிலேயாம் பாலாக்கின் அதிகாரிகளிடம், "என் தேவனாகிய கர்த்தருக்கு நான் அடிபணிய வேண்டும். அவரது ஆணைக்கு எதிராக நான் எதையும் செய்ய முடியாது. சிறியதோ பெரியதோ கர்த்தருடைய ஆணையில்லாமல் நான் எதையும் செய்யமாட்டேன். பாலாக் அரசன் ஒரு அழகான மாளிகையுடன் தங்கமும் வெள்ளியும் நிறைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக நான் ஒன்றும் செய்யமாட்டேன்.
RCTA   பாலாம் அவர்களை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியையும் பொன்னையும் தந்தாலும், நான் கடவுளாகிய ஆண்டவர் சொல்லியதற்கு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சொல்லி, அவருடைய வார்த்தையைப் புரட்டுதல் என்னாலே இயலாது.
ECTA   ஆனால் பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது; பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;