Bible Language

1 Samuel 2:22 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
IRVTA   {ஏலியும் துன்மார்க்க மகன்களும்} PS ஏலி மிகுந்த வயதானவனாக இருந்தான்; அவன் தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூடுகிற பெண்களோடு தகாதஉறவு கொள்வதையும் கேள்விப்பட்டு,
ERVTA   ஏலிக்கு மிகவும் வயது ஆயிற்று, சீலோவிற்கு வரும் இஸ்ரவேலரிடம் தம் பிள்ளைகள் நடந்து கொள்வதைப்பற்றி, அவன் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டான். அதோடு அவன் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் வேலை செய்த பெண்களோடுப் படுத்துக்கொள்வதாகவும் கேள்விப்பட்டான்.
RCTA   ஆனால் ஏலி முதிர் வயதினரான போது, தம் புதல்வர்கள் இஸ்ராயேலர் அனைவருக்கும் செய்து வந்த அனைத்தையும், கூடார வாயிலைக் காத்துவந்த பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததையும் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி,
ECTA   ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்யேலருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,