Bible Language

2 Kings 2:3 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
IRVTA   அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
ERVTA   சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, "இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்" என்று பதிலளித்தான்.
RCTA   அப்பொழுது பேத்தலில் இருந்த இறைவாக்கினரின் புதல்வர்கள் எலிசேயுவிடம் ஓடிவந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டனர். அதற்கு அவர், "எனக்குத் தெரியும்; நீங்கள் அமைதியாய் இருங்கள்" என்று கூறினார்.
ECTA   அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டனர். அதற்கு அவர் "ஆம், எனக்குத் தெரியும்; அதைப் பற்றிப் பேச வேண்டாம்" என்று கூறினார்.