Bible Language

Acts 19:4 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
IRVTA   அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
ERVTA   பவுல், மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே என்றான்.
RCTA   சின்னப்பர் அப்பொழுது, "அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம். அதைக் கொடுத்தபோது, தமக்குப்பின் வருபவர் மீது விசுவாசம்கொள்ள வேண்டுமென மக்களுக்குச் சொன்னார்: அவர் அப்படிக் குறிப்பிட்டது இயேசுவைத்தான்" என்றார்.
ECTA   அப்பொழுது பவுல், "யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்" என்றார்.