Bible Language

Isaiah 47:1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.
IRVTA   {பாபிலோனின் வீழ்ச்சி} PS பாபிலோனின் கன்னிப்பெண்ணாகிய மகளே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் மகளே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ கர்வமுள்ளவள் என்றும் சுகசெல்வி என்றும் இனி அழைக்கப்படுவதில்லை.
ERVTA   "மண்ணிலே இறங்கிவந்து அங்கே உட்காரு! கல்தேயரின் கன்னியே தரையில் உட்காரு! இப்போது நீ ஆள்பவள் இல்லை! இனிமேல் நீ மென்மையானவள் என்று உன்னை ஜனங்கள் நினைக்கமாட்டார்கள்.
RCTA   பபிலோன் என்னும் மகளே, கன்னிப் பெண்ணே, அரியணை விட்டிறங்கிப் புழுதியில் உட்கார்; தரை மீது அமர்ந்துகொள்; கல்தேயர் மகளுக்கு அரியணை கிடையாது; ஏனெனில், மெல்லியலாள், இளநங்கை என இனி நீ அழைக்கப் படமாட்டாய்.
ECTA   மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; "மெல்லியலாள் ", "இனியவள்" என்று இனி நீ அழைக்கப்படாய்.