Bible Language

Psalms 8 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
IRVTA   எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
ERVTA   எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
RCTA   ஆண்டவரே, எம் ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு வியப்புக்குரியது! நீர் உம் மகிமையை வானங்களுக்கு மேலாக விளங்கச் செய்தீர்.
ECTA   ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.