Bible Language

2 Kings 5:23 (RV) Revised Version

Versions

TOV   அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுவஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரரான இரண்டுபேர்மேல் வைத்தான்.
IRVTA   அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வற்புறுத்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுஉடைகளோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரர்களான இரண்டுபேர்மேல் வைத்தான்.
ERVTA   அதற்கு நாகமான், "தயவு செய்து 150 பவுண்டு வெள்ளியை எடுத்துக்கொள்க" என்றான். பின் அவனை (எடுக்க) அவசரப்படுத்தி இரண்டு பைகளில் இரண்டு தாலந்த வெள்ளியையும் இரண்டு மாற்று ஆடைகளையும் கட்டினான். பிறகு நாகமான் இவற்றை அவனது இரண்டு வேலைக்காரர்களிடம் கேயாசிக்குத் தூக்கி வரும்படி கொடுத்தான்.
RCTA   அதற்கு நாமான், "நீ இரண்டு தாலந்து கொண்டு போவது நலம்" என்று கூறி, அவற்றை ஜியேசி பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினான். பிறகு அவற்றையும் இரண்டு உடைகளையும் இரண்டு சாக்குகளில் போட்டுக் கட்டி, அவற்றைத் தன் ஊழியர்களில் இருவர் மேல் சுமத்தினான். அவர்களும் அவற்றைச் சுமந்து கொண்டு ஜியேசிக்கு முன் சென்றனர்.
ECTA   அதற்கு நாமான், "எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும்" என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.