Bible Language

Judges 7:12 (RV) Revised Version

Versions

TOV   மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திய புத்திரரும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.
IRVTA   மீதியானியர்களும், அமலேக்கியர்களும், எல்லாக் கிழக்குப் பகுதி மக்களும், வெட்டுக்கிளிகளைப்போலத் திரளாகப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாக இருந்தது.
ERVTA   அப்பள்ளத்தாக்கில் மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கிலிருந்து வந்த அனைத்து ஜனங்களும் முகாமிட்டுத் தங்கி இருந்தனர். வெட்டுக் கிளிகளின் கூட்டத்தைப் போல அவர்கள் எண்ணிக்கையில் மிகுந்திருந்தனர். கடற்கரை மணலைப் போன்று அவர்களுக்கு ஒட்டகங்கள் இருந்ததுபோல் தோன்றிற்று.
RCTA   மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டினர் அனைவரும் வெட்டுக்கிளிக் கூட்டம் போல் பள்ளத்தாக்கில் படுத்திருந்தனர். எண்ணற்ற ஒட்டகங்களும் கடலோரத்து மணற் குவியல் போலக் கிடந்தன.
ECTA   மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வெட்டுக்கிளி போன்று ஏராளமாகப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். கடற்கரையில் உள்ள ஏராளமான மணலைப் போன்று அவர்கள் ஒட்டகங்களுக்கு எண்ணிக்கை இல்லை.