Bible Language

Leviticus 13:59 (RV) Revised Version

Versions

TOV   ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
IRVTA   ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்திற்குரிய விதிமுறைகள் இதுவே என்றார். PE
ERVTA   இவையே, தோலாடை அல்லது நூலாடை, பின்னப்பட்டது அல்லது நெய்யப்பட்ட ஆடைகளின் மேல் தோன்றும் தொழுநோய் பற்றிய விதிகள் ஆகும் என்று கூறினார்.
RCTA   ஆட்டுமயிர்களால் அல்லது மெல்லிய சணல் நூல்களால் நெய்யப்பட்ட அவ்வகைப் பொருட்களிலும் தொழுநோய் காணப்பட்டால், அது எப்படி சுத்தமாகும் அல்லது தீட்டுள்ளதாகும் என்பதற்கு இதுவே சட்டமாம் என்று ( ஆண்டவர் ) திருவுளம் பற்றினார்.
ECTA   ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே."