Bible Language

1 Samuel 30:15 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
IRVTA   தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்திற்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். PS
ERVTA   தாவீது அவனிடம், "எங்கள் குடும்பத்தைப் பிடித்துப் போனவர்கள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துப் போவாயா?" எனக் கேட்டான். அதற்கு அந்த எகிப்தியன், "தேவன் முன்னிலையில் சிறப்பு ஆணை செய்து தந்தால் நான் உங்களுக்கு உதவுவேன். அதன்படி நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது, அதோடு என் எஜமானனிடமும் என்னைத் திரும்ப அனுப்பக் கூடாது" என்றான்.
RCTA   தாவீது அவனைப் பார்த்து, "அந்த கூட்டத்தினரிடம் என்னைக் கூட்டிக் கொண்டு போக உன்னால் கூடுமா ?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீர் என்னைக் கொல்லுவதில்லை என்றும், என் தலைவன் கையில் ஒப்படைப்பதில்லை என்றும் கடவுள் பெயரால் ஆணையிடும்: அப்பொழுது நான் உம்மை அக்கூட்டத்தினரிடம் கூட்டிக் கொண்டு போவேன்" என்றான். தாவீதும் அப்படியே ஆணையிட்டான்.
ECTA   தாவீது அவனிடம் "அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?" என்று கேட்க அவன் "என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்; அப்பொழுது உங்களை அழைத்துச் செல்வேன் "என்றான்.