Bible Language

2 Samuel 3:26 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
IRVTA   யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
ERVTA   யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை.
RCTA   ஆகையால் யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டு, தாவீதுக்குத் தெரியாமல் அப்நேருக்குத் தூதரை உடனே அனுப்பி அவனை நீரா என்ற ஏரியிலிருந்து திரும்பவும் அழைத்துக் கொண்டு வந்தான்.
ECTA   யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.