Bible Language

Acts 26:14 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
IRVTA   நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
ERVTA   நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ԅசவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக் கொண்டிருக்கிறாய் என்றது.
RCTA   எல்லோரும் தரையில் விழுந்தோம். அப்போது, ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குத்தான் துன்பம் ' என ஒரு குரல் எபிரேய மொழியில் சொல்லக் கேட்டேன்.
ECTA   நாங்களனைவரும் தரையில் விழுந்தோம். எபிரேய மொழியில், "சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்" என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன்.