Bible Language

Daniel 2:26 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனங்களையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.
IRVTA   ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான்.
ERVTA   அரசன் தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), "உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?" என்று கேட்டான்.
RCTA   அரசனோ பல்தசார் என்னும் பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, 'நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்க உன்னால் கூடுமா?" என்று கேட்டான்.
ECTA   அரசனோ "பெல்தசாச்சர்" என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, "நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா?" என்று கேட்டான்.