Bible Language

Deuteronomy 27:9 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
IRVTA   {ஏபால் மலையிலிருந்து கூறப்பட்ட சாபங்கள்} PS பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: “இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய யெகோவாவுக்குரிய மக்கள் கூட்டமானாய்.
ERVTA   மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, "அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.
RCTA   பிறகு மோயீசனும் லேவி புதல்வர்களாகிய குருக்குளும், இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயலே, கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவருடைய இனமானாய்.
ECTA   பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது; "இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.