Bible Language

Ezekiel 20:47 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தென்திசைக்காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜூவாலிக்கிற ஜூவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.
IRVTA   தெற்குதிசைக்காட்டை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேள், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் நெருப்பை கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான எல்லா மரங்களையும் பட்டுப்போன எல்லா மரங்களையும் எரிக்கும்; ஜூவாலிக்கிற ஜூவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குவரையுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.
ERVTA   நெகேவ்காட்டிடம் சொல், "கர்த்தருடைய வார்த்தையைக் கேள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: பார், உன் காட்டில் நெருப்பிட நான் தயாராக இருக்கிறேன். நெருப்பானது எல்லா பச்சை மரங்களையும் எல்லா காய்ந்த மரங்களையும் அழிக்கும். எரியும் ஜூவாலையை அணைக்கமுடியாது. தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து நிலமும் எரியும்.
RCTA   நெகெபில் உள்ள காட்டுக்குச் சொல்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் உன்னில் அக்கினியை மூட்டி, உன்னிடத்தில் உள்ள பச்சை மரம், பட்ட மரம் யாவற்றையும் கொளுத்தப்போகிறோம்; கொழுந்து விட்டெரியும் சுவாலை அணைக்கப்படாது; தெற்கு முதல் வடக்கு வரை எல்லா முகங்களும் கருகிப் போகும்.
ECTA   நெகேபிலிருக்கும் காட்டு வெளிக்குச் சொல். ஆண்டவரின் வாக்கைக் கேள். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் உனக்குத் தீ வைப்பேன். அது உன்னிலிருக்கும் எல்லாப் பச்சை மரங்களையும் பட்ட மரங்களையும் எரித்து விடும். கொழுந்து விட்டெரியும் அப்பிழம்பு அணைக்கப்படாது. தென்திசைமுதல் வடதிசைவரை இருக்கும் எல்லா முகங்களும் அதனால் கருகிப் போகும்.