Bible Language

Ezekiel 44:22 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியரின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.
IRVTA   விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் திருமணம்செய்யாமல், இஸ்ரவேல் வீட்டாளாகிய கன்னிகையையோ, ஒரு ஆசாரியரின் மனைவியாக இருந்த விதவையையோ திருமணம்செய்யலாம்.
ERVTA   ஆசாரியர்கள் ஒரு விதவையையோ, விவாகரத்து பெற்றவளையோ மணக்கக் கூடாது. அவர்கள் இஸ்ரவேல் வம்சத்திலுள்ள கன்னிப் பெண்களையோ அல்லது மரித்துப்போன ஆசாரியனின் விதவையையோ மாத்திரம் மணந்துக்கொள்ளலாம்.
RCTA   அர்ச்சகர்கள் கைம்பெண்ணையோ தள்ளப்பட்டவளையோ மணக்கக் கூடாது; இஸ்ராயேல் இனத்தவளான கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்; ஆனாலும் முன்பு அர்ச்சகனின் மனைவியாய் இருந்த கைம்பெண்ணை மணப்பதற்குத் தடையில்லை.
ECTA   எந்தக் குருவும் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்ற மங்கையையோ மணமுடித்தலாகாது. ஆனால் இஸ்ரயேல் இனத்துக் கன்னிப்பெண்ணையோ குருவின் கைம்பெண்ணையோ மட்டுமே மணமுடிக்கலாம்.