Bible Language

Habakkuk 2:6 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
IRVTA   இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
ERVTA   ஆனால் ஜனங்கள் அவனைப் பார்த்து விரைவில் நகைப்பார்கள். அவர்கள் அவனது தோல்வியைப்பற்றி நகைத்து சொல்வார்கள், ԅஇது மிகவும் மோசமானது. அந்த மனிதன் பலவற்றை எடுத்தான், அவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எடுத்தான், அவன் அதிகமான கடன்களை வசூலித்து அதினால் செல்வந்தனானான்."
RCTA   இவர்கள் அனைவரும் அவன் மேல் வசைப்பாடல்களும், வஞ்சப் புகழ்ச்சியாய் ஏளன மொழிகளும் புனைவார்களன்றோ? அவர்கள் இவ்வாறு சொல்வார்கள்: தன்னுடையன அல்லாதவற்றைத் தனக்கெனக் குவித்து அடைமானங்களைத் தன் மேல் சுமத்திக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்குச் செய்வான்?
ECTA   ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும், ஏளனப் பாடல்களையும் இப்படிப் புனைவார்கள்; தமக்குரியது அல்லாததைக் தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? அவர்கள் தங்கள் மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்! ;