Bible Language

Judges 17:9 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
IRVTA   எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.
ERVTA   மீகா அவனிடம், "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டான். இளைஞன் அதற்கு, "நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று பதில் கூறினான்.
RCTA   அவன் எங்கிருந்து வந்தான் என்று அவனைக் கேட்க, அவன், "நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வருகிறேன்; நான் ஒரு லேவியன். எவ்விடத்தில் தங்குவது எனக்கு வசதியாயும் பயனுள்ளதாயும் இருக்குமோ, அவ்விடத்திற்குப் போவேன்" என்றான்.
ECTA   மீக்கா அவரிடம், "எங்கிருந்து வருகின்றீர்?" என்று கேட்டார். அவர் அவரிடம், "நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்" என்றார்.