Bible Language

Micah 4:10 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
IRVTA   மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
ERVTA   சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் "குழந்தையை" பெற்றெடுங்கள். நீங்கள் நகரை விட்டு (எருசலேம்) வெளியே போகவேண்டும். நீங்கள் வயல் வெளியில் பேவீர்கள். நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக் கருதுகிறேன். ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்து காப் பாற்றப்படுவீர்கள். கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார். அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார்.
RCTA   சீயோன் மகளே, பிரசவ வேதனையிலிருப்பவளைப் போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு; ஏனெனில் இப்பொழுது நீ நகரத்தை விட்டு வெளியேறி நாட்டுப்புறத்தில் வாழ்வாய்; பபிலோனுக்குப் போவாய்; ஆங்கே நீ விடுதலை பெறுவாய், உன் பகைவர் கையிலிருந்து உன்னை ஆண்டவர் மீட்பார்.
ECTA   மகளே சீயோன்! பேறுகாலப் பெண்ணைப்போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு; ஏனெனில், இப்பொழுதே நீ நகரைவிட்டு வெளியேறுவாய்; வயல்வெளிகளில் குடியிருப்பாய்; பாபிலோனுக்குப் போவாய்; அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்; உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.