Bible Language

2 Samuel 11:2 (WEB) World English Bible

Versions

TOV   ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.
IRVTA   ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
ERVTA   சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள்.
RCTA   அன்றொரு நாள் தாவீது நண்பகலுக்குப் பின் தன் படுக்கையினின்று எழுந்து அரண்மனை மாடியில் உலாவுகையில், அவருக்கு எதிரே தம் மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார். அப்பெண் மிகவும் அழகாக இருந்தாள்.
ECTA   ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.