Bible Language

Genesis 28:5 (WEB) World English Bible

Versions

TOV   ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
IRVTA   ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய மகனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்திற்குப் போகப் புறப்பட்டான்.
ERVTA   ஆகவே ஈசாக்கு யாக்கோபை பதான் ஆராமுக்கு அனுப்பி வைத்தான். யாக்கோபும் லாபானிடம் போனான். பெத்துவேல் லாபானுக்கும் ரெபெக்காளுக்கும் தந்தை. ரெபெக்காள் ஏசாவுக்கும் யாக்கோபுக்கும் தாய்.
RCTA   ஈசாக் யாக்கோபை அவ்விதமாய் அனுப்பிவிட்ட பின், அவன் புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், தன் தாயார் இரெபேக்காளின் தமையனும், சீரியா நாட்டினனான பத்துவேலின் புதல்வனுமான லாபானிடம் சேர்ந்தான்.
ECTA   இவ்வாறு அவனும் பதான் அராமுக்குச் சென்று, அரமேயனான பெத்துவேலின் மகனும் யாக்கோபு, ஏசாவின் தாய் ரெபேக்காவின் சகோதரனுமான லாபானிடம் வந்து சேர்ந்தான்.