Bible Language

Ruth 4:1 (YLT) Young's Literal Translation

Versions

TOV   போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
IRVTA   {போவாஸ் ரூத்தைத் திருமணம்செய்தல்} PS போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: அண்ணே, என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
ERVTA   நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், "நண்பனே! வா, இங்கே உட்காரு!" என்றான்.
RCTA   இதற்கிடையில் போசு நகர வாயிலை அடைந்து அங்கே அமர்ந்திருந்தான். அப்பொழுது அவன் முன்பு சொல்லியிருந்த அந்த உறவினன் அவ்வழியே வரக் கண்டு, அவன் பெயரைச் சொல்லி அழைத்து, "இங்கு வந்து சற்று அமரும்" என்று கூறினான். அவனும் வந்து அமர்ந்தான்.
ECTA   இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறைஉறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, "இங்கே வந்து சற்று உட்காரும் என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.